
காணாமல் போன பிரபாஸ் இன்ஸ்டாகிராம்
'பாகுபலி' படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்தார் பிரபாஸ். அதன்பின் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் தளத்திலும் நுழைந்தார். அவருடைய கணக்கில் 10 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் இருந்தார்கள். இந்நிலையில் நேற்று முதல் அவருடைய கணக்கு திடீரென காணாமல் போய்விட்டது.
அந்த கணக்கை பிரபாஸே நீக்கிவிட்டாரா அல்லது யாராவது ஹேக் செய்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. பான் இந்தியா நடிகராக இருக்கும் பட்சத்தில் சமூக வலைத்தளங்களில் அவர்களது படம் பற்றிய அப்டேட்டுகள் கொடுப்பதால் ரசிகர்கள் மகிழ்கிறார்கள். பிரபாஸ் நடித்து அடுத்து 'சலார்' படம் வெளிவர உள்ள நிலையில் அவருடைய இன்ஸ்டா கணக்கிற்கு என்ன ஆனது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.