சுப்மான் கில் அடித்த அடுத்தடுத்த 2 சிக்சர்..! துள்ளிக் குதித்த சாரா டெண்டுல்கர் – போகஸ்செய்த கேமராமேன்

இந்திய அணியின் இளம் நட்சத்திர பிளேயரான சுப்மான் கில், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரை காதலிப்பதாக அண்மைக் காலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சுப்மான் கில்லும் பேட்டி ஒன்றில் சாராவுடன் டேட்டிங் செய்வதாக கூறினார். இருப்பினும் இது குறித்து வெளிவந்த தகவல்கள் எல்லாமே கிசுகிசுக்களாக இருந்தன. இந்தநிலையில், புனேவில் நடைபெறும் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியை சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் நேரில் கண்டுகளித்தார். அப்போது சுப்மான் கில் அடுத்தடுத்து அடித்த சிக்சர்கள் அடித்ததை பார்த்து துள்ளிக் குதித்து கைதட்டி பாராட்டினார். இதனை கேமராமேன் சரியாக போக்கஸ் செய்ய, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். சாரா டெண்டுல்கரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். 

இந்தியா – வங்கேதசம் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை லீக் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. சவாலான ஸ்கோர் இல்லையென்றாலும், குறைசொல்ல முடியாத அளவுக்கான ஸ்கோரை வங்கதேசம் அணி இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது. ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையில் வங்கதேசம் அணி இந்திய அணியை வீழ்த்தியிருப்பதால், கொஞ்சம் எச்சரிக்கையுடனே இந்திய அணி சேஸிங்கை தொடர்ந்தது.

இந்திய அணியில் சுப்மான் கில் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர். கில் நிதானம் காட்டினாலும், ரோகித் சர்மா அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்க தொடங்கினார். 40 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா அவுட்டானார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய சுப்மான் கில் அரைசதம் விளாசினார். 55 பந்துகளை எதிர்கொண்ட அவர் 53 ரன்கள் எடுத்த அவர் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசினார்.  

October 19, 2023

வங்கதேசம் அணியின் நசும் அஹ்மத் 10வது ஓவர் வீசும்போது தான் சுப்மான் கில் அடுத்தடுத்து 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இந்த சிக்சர்களை பார்த்து தான் சாரா டெண்டுல்கர் மகிழ்ச்சியடைந்தார். சுப்மான் கில்லின் சிக்சர்களை பார்த்து உற்சாகமடைந்த அவர், திடீரென கைதட்டி குதித்த ஆரம்பித்தார். இதனை கேமராமேன் சரியாக போக்கஸ் செய்ய, மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அவர்களின் காதல் கிசுகிசுக்களுக்கு ஏற்ப கைதட்டி உற்சாகப்படுத்தினர். சுப்மான் கில்லுக்காக தான் சாரா டெண்டுல்கர் புனே மைதானத்துக்கு வந்திருப்பதாகவும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொளுத்தி போட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.