சென்னை: அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ – ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், டிசம்பர் 28ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து உள்ளது. திருச்சியில் தனியார் விடுதி ஒன்றில் ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து […]
