SL vs NED: இலங்கையின் மோசமான பவுலிங் – 6 விக்கெட்டுக்கு பிறகு கெத்து காட்டிய நெதர்லாந்து..!

உலக கோப்பை 2023 தொடரில் நெதர்லாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முந்தயை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய அந்த அணி அதே உத்வேகத்துடன் இலங்கை அணியை எதிர்கொண்டது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய நெதர்லாந்து அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவில்லை. இலங்கை அணியினரின் சிறப்பான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறி கொடுத்து பெவிலியன் திரும்பிக் கொண்டே இருந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் அக்கர்மேன் மட்டும் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் எல்லாம் 4,6 மற்றும் 9 ரன்களுக்கு இலங்கை அணியிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் நெதர்லாந்து அணி ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அப்போது இலங்கை அணி வீரர்களே நெதர்லாந்து அணி 150 ரன்களை கடக்காது என்ற மிதப்பில் பந்துவீசிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் கூட அப்படி தான் நினைத்தனர். இதனால் பார்ட் டைம் பவுலர்களை இலங்கை அணி மிடில் ஓவர்களில் அதிகமாக பயன்படுத்தி பந்துவீச வைத்தது. ஆனால் நெதர்லாந்து அணியில் 7வது விக்கெட்டுக்கு சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் கூட்டணி அமைத்தனர். அவர்கள் இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன், பொறுப்புடன் ஆடி ரன்களையும் சேர்த்தனர். முதலில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அரைசதம் விளாச, அடுத்ததாக வான் பீக்கும் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி இன்னும் கொஞ்ச நேரம் களத்தில் நின்றிருந்தால் நெதர்லாந்து அணி 280 ரன்களுக்கும் மேலாக அடித்திருக்கும். துருதிஷ்டவசமாக ஏங்கல்பிரெக்ட் 82 பந்துகளில் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நான்கு பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். வான் பீக் 75 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்களின் பார்ட்ன்ஷிப் காரணமாக 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் குவித்தனர். உலக கோப்பையில் 7வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை வான்பீக் – ஏங்கல்பிரெக்ட்ரஜோடி படைத்திருக்கிறது.

 October 21, 2023

நெதர்லாந்து அணியைப் பொறுத்தவரை இது சவாலான ஸ்கோரையும் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணியை பந்துவீசி தோற்கடித்திருப்பதால், இந்த ஆட்டத்திலும் ஏதாவது மேஜிக் செய்து நெதர்லாந்து டீம் இலங்கையை வீழ்த்த வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் யூகித்துள்ளனர். அதற்கேற்ப இலங்கை அணியும் தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளையும் இழந்திருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.