சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் LCU-ன் கீழ் உருவாகியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ள லியோ, விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதற்கெல்லாம் காரணம் லியோ படத்தில் பாதி போர்ஷனை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என சொல்லப்படுகிறது.