ICC World Cup 2023, SA vs BAN: நடப்பு உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 382 ரன்களை குவித்து மிரட்டி உள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 174 ரன்களையும், கிளாசென் 90 ரன்களையும், கேப்டன் எய்டன் மார்க்ரம் 60 ரன்களையும் எடுத்தனர். இந்த இன்னிங்ஸில் 19 சிக்ஸர்களை பறக்கவிட்டது.