புதுடில்லி,ஹிந்தி திரைப்பட நடிகரான ராஜ்குமார் ராவ், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தேர்தல் கமிஷனின் தேசிய அடையாளமாக’ நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘ஜனநாயகம் என்றால் என்ன’ என்பது குறித்து ஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பள்ளிகளில் இது குறித்த பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.
இதற்காக மத்திய கல்வி அமைச்சகத்துடன் விரைவில் தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்ய உள்ளது. ஜனநாயகத்தில் வாக்காளர்களின் முக்கிய பங்கு குறித்து மாணவ பருவத்திலேயே அவர்களது மனதில் புகுத்தப்பட வேண்டும்.
இளைஞர்கள், 18 வயதானதும் வாக்காளர்களாக மாறுகின்றனர். ஆனால் ஓட்டு போடுவது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.
ஜனநாயகத்தின் வேர்கள் குழந்தைகளின் மனதில் பதிவதை உறுதி செய்ய, அது குறித்து பாடத்திட்டத்தை பள்ளிகளில் வைக்க தேர்தல் கமிஷன்திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement