சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவர் திருமணம் செய்துகொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அந்தப் பகுதியில் சொந்தமாக வீடுகள் இருக்கின்றன. அவற்றை வாடகைக்குவிட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தார். மாதந்தோறும் வாடகைப் பணம் வந்ததால், ராமு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், மதுபாட்டில் மற்றும் கத்தியால் ராமுவைச் சரமாரியாகக் குத்திக் கொலைசெய்தனர். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இன்று காலை நீண்ட நேரமாக ராமு வீட்டைவிட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ராமு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துகிடப்பது தெரியவந்தது. இது குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்துக்கு அங்கிருப்பவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ராமுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ராமு கொலைசெய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.