சென்னை: லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். முன்னதாக லியோ படப்பிடிப்பில் விஜய்க்கும் லோகேஷுக்கும் இடையே மோதம் என செய்திகள் வெளியாகின. அதனால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், லியோ சக்சஸ் மீட்டில், “நன்றி சொல்வதற்காக தான் வந்தேன்” என லோகேஷ் பேசியது வைரலாகி வருகிறது.
