டெல்லி: டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 9 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஹவாலா மோசடி தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுபான பாலிசி முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி துணைமுதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், மேலும் பல அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. […]
