
‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'வில் என்ட்ரி கொடுத்த காயத்ரி ப்ரியா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அண்மையில் நிறைவுற்றது. இதனையடுத்து சீசன் 2 ஒளிபரப்பாக வருகிறது. முதல் சீசனில் நடித்த பல நடிகர்கள் இரண்டாவது சீசனில் மிஸ்ஸாகியுள்ள நிலையில் ஸ்டாலின் முத்துவும், ஹேமாவும் மட்டுமே இரண்டாவது சீசனிலும் தொடர்கின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் புதுவரவாக காயத்ரி ப்ரியா, வடிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள காயத்ரி ப்ரியா, 'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 வில் வடிவு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பயணத்தில் நாங்கள் வெற்றியடைய நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.