சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், தேர்வு செய்யப்படாத பயனர்கள் மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, தவறுகளை திருத்தி மேல்முறையீடு செய்தவர்களில், தேர்வு செய்யப்பட்ட தகுதியானோருக்கு வரும் 25ந்தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு தேர்வு […]
