2 Enforcement Directorate Officials Arrested In Rajasthan On Bribery Charge | விசாரணையை நிறுத்த லஞ்சம்: ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெய்ப்பூர்: சிட் பண்டு மோசடி வழக்கில் நடந்து வரும் விசாரணையை நிறுத்த ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை ராஜஸ்தானில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிட் பண்டு வழக்கில் விசாரணையை நிறுத்த ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கைதானவர்கள் நாவல் கிஷோர் மீனா மற்றும் பாபுலால் மீனா என தெரியவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.