வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: காசாவில் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 27 நாட்களாக போர் நடக்கிறது. இதில், பாலஸ்தீனத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8,500 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலில், 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது படிப்படியாக, தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது.
காசா பகுதியில், அகதிகள் முகாம்கள் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில், இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காசாவில் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம்.
அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தாக்குதலால் ஏற்பட்ட அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு போர்க்குற்றங்களுக்கு சமமாக கருதுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement