திருவனந்தபுரம்:கேரள அரசின் சாதனைகளை விளக்கும் கேரளீயம் விழா, திருவனந்தபுரத்தில் நேற்று துவங்கியது. இதில் நடிகர் கமல், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர்.
கேரள மாநிலம் இதுவரை படைத்த சாதனைகளை விளக்கும் வகையில், ‘கேரளீயம் 2023’ என்ற பெயரில் ஒரு வார காலம் விழா நடத்த அம்மாநில அரசு முடிவு செய்தது.
திருவனந்தபுரத்தில் நேற்று துவங்கிய விழாவை, முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார். நடிகர்கள் கமல், மம்முட்டி, மோகன்லால், நடிகை ேஷாபனா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நவ.,7 தேதி வரை திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோழிக்கோடு உட்பட மாநிலம் முழுதும் கலைநிகழ்ச்சி களுடன் விழா நடைபெற உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement