சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு ரஜினியின் லால் சலாம் வெளியாகவுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
