மும்பை:மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த சஞ்சய் ஷா என்பவர் ஜெ.பி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவருக்கு மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில், வைர நகைக்கடை உள்ளது.
வைரங்களின் இருப்புகளை சோதித்த போது, 5.6 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் கணக்கில் வராததை அறிந்து சஞ்சய் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
அதில், தன் கடையில் வேலை பார்க்கும் பிரசாந்த் சிங், விஷால் சிங் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, திருட்டை ஒப்புக்கொண்டனர்.
திருடிய வைரங்களை நிலேஷ் ஷா என்ற முன்னாள் ஊழியர் வாயிலாக விற்று பணமாக்கியதாகவும் தெரிவித்தனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement