வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி 302 ரன்னில் அபார வெற்றி பெற்றது.
![]() |
இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் இன்றைய லீக் போட்டியில் இந்திய அணி 357 ரன்கள் குவித்தது. இந்தியாவின் விராட் கோஹ்லி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்தனர்.
இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று (நவ.,2) நடந்த லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ்’ வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
![]() |
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் (4) ஏமாற்றினார். சுப்மன் கில் – விராட் கோஹ்லி ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். சதத்தை நெருங்கிய நேரத்தில் சுப்மன் 92 ரன்னிலும், விராட் கோஹ்லி 88 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அதிரடியாக ரன் சேர்த்தார்.
லோகேஷ் ராகுல் (21), சூர்யகுமார் (12) நிலைக்கவில்லை. மறுமுனையில் அரைசதம் கடந்த ஸ்ரேயாஸ் 82 ரன்னில் கேட்சானார். இறுதியில் ஓரளவு அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா, கடைசி பந்தில் அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.
358 ரன் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்களுக்கு சுருண்டது. இந்நிலையில் இந்திய அணி 302 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இலங்கை வீரர்கள் 5 பேர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். இந்திய தரப்பில் ஷமி 5 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா.
உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 7 வது போட்டியிலும் வென்று இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா இதுவரை தான் ஆடிய அனைத்து ஆட்டத்திலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

