Yamaha MT-09 : இந்தியா வரவுள்ள 2024 யமஹா எம்டி-09 பைக் அறிமுகமானது – EICMA 2023

வரும் நவம்பர் 7-12 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள EICMA 2023 அரங்கில்  2024 யமஹா MT-09 பைக்கினை அறிமுகம் செய்யப்பட உள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட எம்டி-09 ஸ்டைலிங் மாற்றங்கள் கொண்டுள்ளது.

முந்தைய மாடலை விட ஸ்போர்ட்டிவ் ரைடிங் மேம்பாடு கொண்ட எம்டி-09 மாடலில் பல்வேறு வசதிகளுடன் புதிய எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ளது.

2024 Yamaha MT-09

புதிய யமஹா MT-09 பைக்கில் 890cc, CP3, மூன்று சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக10,000rpm-ல் 117.3bhp பவர் மற்றும் 7,000rpm-ல் 93Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் புதிய எல்இடி ஹெட்லைட் யூனிட் கொடுக்கப்பட்டு மற்றும் கூர்மையான வடிவத்தை பெற்று புதிய பெட்ரோல் டேங்க் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ரைடிங் பொசிஷன் சற்று ஸ்போர்ட்டிவாக மாற்றப்பட்டுள்ளதாக யமஹா கூறுகிறது.

MT-09 இப்போது பிரெம்போ மாஸ்டர் சிலிண்டர் மற்றும் புதிய பிரிட்ஜ்ஸ்டோன் ஹைப்பர்ஸ்போர்ட் S23 டயர் கொண்டுள்ளது.

yamaha mt-09 cluster

ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் நேவிகேஷன் வழங்குகின்ற புதிய ஐந்து அங்குல TFT டேஷ்போர்டு உள்ள 2024 ஆம் ஆண்டு மாடலில், மூன்று ரைடிங் மோடு மற்றும் இரண்டு தனிப்பயனாக்கக்கூடிய ரைடிங் முறைகள் மற்றும் க்ரூஸ் கட்டுப்பாடு மற்றும் சுயமாக ரத்து செய்யும் டர்ன் இண்டிகேட்டர்களையும் பெறுகிறது.

mt-09 bike

இந்திய சந்தையில் புதிய யமஹா R3 மற்றும் MT-03 பைக்கில் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. 2024 ஆம் ஆண்டில் எம்டி-09 பைக் அறிமுகம் செய்யப்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.