4 ஆயிரம் தள்ளுபடியில் இந்த ஸ்மார்ட்போனை நீங்க வாங்கலாம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Samsung Galaxy A14 5G Offer: சாம்சங் நிறுவனம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்று. சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிறைவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனம் முதல் இடம் பிடித்தது. அந்த வகையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

பயனர்களுக்கு எளிய மற்றும் வலுவான சேவைகளை வழங்குவதில் சாம்சங் ஸ்மார்ட்போன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதனாலேயே நடுத்தர வர்க்கத்தினரின் மொபைலாக சாம்சங் நிலைபெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது பண்டிகை கால தள்ளுபடி விற்பனையிலும் சாம்சங் முன்னிலை வகிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களை நீங்கள் சாம்சங்கின் அதிகாரப்பூர்வ தளத்திலும் பெறலாம். இல்லையெனில், பிற இ-காமர்ஸ் தளத்திலும் நீங்கள் வாங்கலாம்.

இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் இந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை நீங்கள் மாதத்தவணையில் பல்வேறு சலுகைகளுடன் வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி A14 5ஜி மொபைலின் அசல் விலை 20 ஆயிரத்து 999 ரூபாயாகும். இதை நீங்கள் தற்போது 16 ஆயிரத்து 999 ரூபாய்க்கே வாங்கலாம். தவிர, இந்த மொபைலை 24 மாத தவணையிலும் நீங்கள் வாங்கலாம்.

தினமும் 25 ரூபாய்

தற்போது, பண்டிகை காலம் நடந்து வருவதால், அனைத்து இ-காமர்ஸ் தளங்களிலும், நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தளங்களிலும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. சாம்சங் கேலக்ஸி A14 5ஜி மொபைலில் கிடைக்கும் சலுகைகள் குறித்து இங்கு காணலாம். சாம்சங் கேலக்ஸி A14 5ஜி ஃபோனை தினசரி 25 ரூபாய் வீதம் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இதனுடன் இந்த சாம்சங் போனில் பல சிறந்த தள்ளுபடி சலுகைகளையும் பெறுவீர்கள். ஆனால், அதற்கு முன் அந்த மொபைலில் கிடைக்கும் அம்சங்களை இங்கு காணலாம்.  

சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு நேர்த்தியான மற்றும் பிரீமியம் வகையில் உள்ளது. இந்த மொபைலில் 6.6 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே உள்ளது. இந்த மொபைலில் 50MP முதன்மை சென்சார் கொண்ட பின்புற கேமரா உள்ளது. அதே நேரத்தில், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில், அல்ட்ரா-வைட் மற்றும் மேக்ரோ கேமராக்கள் உள்ளன. கேலக்ஸி A14 ஆனது 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 2 நாட்களுக்கு வரை தாங்கும் எனலாம்.

கேலக்ஸி A14 ஆனது Exynos 850 பிராஸஸரைக் கொண்டுள்ளது. இதில் 4 ஜிபி RAM உள்ளது. RAM பிளஸ் அம்சத்தின் மூலம் நீங்கள் 8 ஜிபி வரை RAM-ஐ நீட்டித்துக்கொள்ள இயலும். இந்த மொபைலின் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைலுக்கு ONE UI 5 அடிப்படையிலான சமீபத்திய Android 13 வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் 4 வருட பாதுகாப்பு அப்டேட்களுக்கும், 2 வருட OS அப்டேட்களுக்கும் தகுதியுடையது என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சலுகை

இந்த சாம்சங் மொபைலின் அசல் விலை 20 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இதை நீங்கள் இப்போது 16 ஆயிரத்து 999 ரூபாய்க்கே வாங்கலாம். இது தவிர, இந்த போனில் 24 மாத கால மாதத் தவணை ஆஃப்பரையும் பெறலாம். மாதாந்திர தவணை 751 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதாவது ஒரு நாளைக்கு நீங்கள் 25 ரூபாய் எடுத்துவைத்தால் போதும்.

வங்கி சலுகைகள்…

நீங்கள் ஹெச்டிஎப்சி வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தினால், உடனடி தள்ளுபடியாக 1500 ரூபாய் கிடைக்கும். ஷாப் செயலி மூலம் 2000 இலவசப் பலன்களையும் பெறுவீர்கள். சாம்சங் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 10 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி A14 5ஜி மொபைலில் நீங்கள் பல வங்கிச் சலுகைகளைப் பெறுவீர்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.