திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவ படை வீரர்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு குறித்த பயனாளிக்கு ஒப்படைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது கடந்த 3ஆம் திகதி இடம் பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி குடும்ப அங்கத்தவர் ஒருவரை உள்ளடக்கிய பயனாளி ஒருவருக்கே இவ் புதிய வீடானது 07 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவியினை அரச சார்பற்ற நிறுவனங்களான ரெக்டோ,IFOH (இலண்டன்) ,தனவந்தர் வழங்கியிருந்ததுடன் நிர்மாணப்பணிகளை திஸ்ஸபுர இராணுவத்தினர் முன்னெடுத்தனர்.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி,தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.யு.பி.குணரத்ன, திஸ்ஸபுர இராணுவ முகாம் லெப்டினன் கொலனல் நலின் மாரசிங்க, 22 ம் படைப் பிரிவு இராணுவ முகாம் மேஜர் ஜெனரல் மிகிது பெரேரா, 223 ம் பிரிவு பிரிகேடியர் வை.எச்.பி.ரன்கஜீவ உட்பட பலர் கலந்து கொண்டனர்.