Himalayan 450 – ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 ஆக்சஸரீஸ் அறிமுகமானது

நவம்பர் 7 ஆம் தேதி EICMA 2023 அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் அட்வென்ச்சர் மற்றும் ரேலி என இருவிதமான ஆக்சஸரீஸ் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் தீம் அடிப்படையிலான ஆக்சஸரீஸ் கொண்டு நீண்ட தொலைவு பயணத்துக்கு ஏற்ற வகையில் துனைக்கருவிகள் வழங்கப்படும், ரேலி தீம் அடிப்படையிலான துனைக்கருவிகளை பயன்படுத்தி முழுமையான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Royal Enfield Himalayan 450 accessories

புதிய ராயல் என்ஃபீல்டு செர்பா 450 என்ஜினை பெறுகின்ற முதல் மாடலான ஹிமாலயன் பைக்கில் 452cc ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உடன் 42 மிமீ திராட்டிள் பாடி எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் மற்றும் ரைட் பை வயர் சிஸ்டத்தை கொண்டுள்ளது.

ரேலி தீம் அடிப்படையில் ஆஃப் ரோடு சாகசங்களின் போது ஏற்படும் சேதாரங்களை தடுக்க ரேலி ஹேண்டில்பார், நக்கிள் கார்டுகள், ரேலி இருக்கை, பேனியர் துணி பேக்குகள், டெயில் பேக் மற்றும் ஹெட்லைட் கிரில் ஆகியவற்றுடன் என்ஜினுக்கு சம்ப் கார்டு மற்றும் ரேடியேட்டர் கவர் போன்றவற்றையும் வழங்குவதுடன், மேல் நோக்கிய ஏரோ புகைப்போக்கி வழங்குகின்றது. ஆனால் ஏரோ எக்ஸ்ஹாஸ்ட் இந்திய சந்தைக்கு கிடைக்காது

அட்வென்ச்சர் தீம் அடிப்படையில், நெடுந்தொலைவு பயணத்திற்கு ஏற்ப அலுமிணிய பன்னீர் பேக்குகள், மேல் பெட்டியுடன் மவுண்டிங் பிளேட்/பின்புற ரேக், பெட்ரோல் டேங்கில் சேடில் பேக் வைக்கும் வசதி, உயரமான வீண்ட்ஷீல்டு, ஹெட்லேம்ப் கிரில், டூரிங் இருக்கைகள், துணை விளக்குகள் மற்றும் மெட்டல் பேஷ் பிளேட் மற்றும் எஞ்சின் கார்டு ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இந்த ஆக்ஸசெரீஸ் பாகங்களை பெற ராயல் என்ஃபீல்டு MIY (make it yours) மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமானதை தேர்வு செய்யலாம்.

royal Enfield Himalayan 450 rally theme Accessories

நாளை ஹிமாலயன் 450 அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு நவம்பர் 24 ஆம் தேதி விலை அறிவிக்கப்படலாம். EICMA 2023 அரங்கில் எலக்ட்ரிக் அட்வென்ச்சர் கான்செப்ட்டை ராயல் என்ஃபீல்டு வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.