மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்கும் படம் #KH234. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை இதன் டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நாளை கமலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் […]