உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கும் மூன்றாவது அணி ஆஸ்திரேலியா. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை ஒற்றைக்காலில் நின்று வெற்றிபெறச் செய்த கிளென் மேக்ஸ்வெல் அணியின் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தார். 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் 5வது விக்கெட்டுக்கு லபுஸ்சாக்னே உடன் ஜோடி சேர்ந்தார் மேக்ஸ்வெல். அணியின் ஸ்கோரை உயர்த்த மேக்ஸ்வெல் போராடிக்கொண்டிருக்க மறுமுனையில் விக்கெட்டுகள் […]