சென்னை: Vadivelu (வடிவேலு) திருப்பாச்சி படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பெஞ்சமினுக்கும் வடிவேலுவுக்கும் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சில பஞ்சாயத்துக்களால் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பெரிய திரையில் அவர் தோன்றாவிட்டாலும் அனைத்து காமெடி சேனல்களிலும் அவரே தோன்றிக்கொண்டிருந்தார். இதனால் வடிவேலு முழுமையாக மக்களிடமிருந்து விலகிவிடவில்லை.