கொரோனல்,
சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தகர கொட்டகைகள் அமைத்தும், மரத்தால் வீடுகளை உருவாக்கியும் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 8 சிறார்கள் உள்பட 14 பேர் பலியாகினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும், மீட்புக்குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், அடுப்பில் சமையல் செய்யும் போது தீப்பற்றி, மர வீடுகளுக்கு பரவியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :