சென்னை ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது எனவும் மீறினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரயில்வே காவல்துறை எஸ் பி கர்ணா சிங் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு காவல்துறை மூலமாகப் பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை ரயில் நிலையங்களுக்குக் கொண்டு செல்வதையோ, ரயில் பெட்டிகளில் கொண்டு […]
