Cheap Monthly Prepaid Plans: ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பலரும் ஒரு வருடத்திற்கு மூன்று மாதம் அல்லது ஒரு மாதத்திற்கான பிளான்களையே தேர்வு செய்வார்கள். ஏனென்றால், நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு மலிவான விலையில் பல பலன்களை அளிக்கும் திட்டங்களையே தேர்வு செய்வார்கள். வருடாந்திர பிளான்களும் குறைந்த விலையில் பல பலன்களை தந்தாலும், ஒரே தொகையாக அவர்கள் அதனை ரீசார்ஜ் செய்துகொள்ள தயங்குவார்கள்.
அந்த வகையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் – ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்து வகையிலும் ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளன. குறிப்பாக, 200 ரூபாய்க்குள் கீழ் ஒரு மாதத்திற்கான வேலிடிட்டியில் பல ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. இவற்றில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் வரம்பில்லா குரல் அழைப்பு உள்ளிட்ட வசதிகளும் அளிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் – ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களின் 200 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இங்கே காணலாம். அவை அதிவேக டேட்டாவுடன் 1 மாதம் வரை வேலிடிட்டியை தருகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டங்களை இங்கு காணலாம்.
ஏர்டெல்
199 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இணையத்தைப் பயன்படுத்துவதற்காக மொத்தம் 3 ஜிபி டேட்டா இந்த பேக்கில் வழங்கப்படுகிறது. மேலும், 300 எஸ்எம்எஸ், ரூ.5 டாக் டைம், இலவச ஹலோ டியூன் மற்றும் Wynk மியூசிக் சந்தா ஆகியவை பேக்கில் கிடைக்கும். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கால வரம்பு 30 நாட்கள் ஆகும்.
வோடோஃபோன் – ஐடியா
195 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியாவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், மொத்தம் 3ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. மேலும், Vi Movie மற்றும் Live TV ஆகியவற்றுக்கான அணுகலை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும், அதாவது சரியாக 30 நாள்களாகும்.
179 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
வோடோஃபோன் – ஐடியா நிறுவனத்தின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 3 ஜிபி வழங்கப்படுகிறது. இதில் போனஸாக 5 ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மற்ற எந்த நெட்வொர்க்குடனும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். இது தவிர, இந்த பிளானுடன் Vi Movie மற்றும் Live TV ஆகியவற்றுக்கான அணுகலைப் பெறுவீர்கள். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
ஜியோ
199 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
இது ஜியோவின் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாகும். இந்த பிளானின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். இதில் தினமும் 1.5 டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதி உள்ளது. இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் ப்ரீபெய்ட் பேக்குடன் வழங்கப்படுகிறது.
179 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அன்லிமிட்டெட் அழைப்பும் இதில் கிடைக்கும். மேலும், ஜியோ டிவி, சினிமா மற்றும் கிளவுட் ஆகியவற்றின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள்.
மேலும் படிக்க | 4 ஜிபி டேட்டா இலவசம்… இதை செய்தால் போதும் – தீபாவளிக்கு பம்பர் பரிசை வழங்கும் BSNL