சென்னை: Sukanya (சுகன்யா) சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் பம்பரம் விடும் காட்சி தொடர்பாக சுகன்யா பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தனது அழகாலும், திறமையாலும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவருக்கு பட வாய்ப்புகள் பெருகின.
