பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது நடித்துவரும் பைரதேவி என்கிற படத்தில் அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர். பைரதேவி என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு பெண் அகோராவாக நடித்துள்ள ராதிகா குமாரசாமியை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது.
