வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆக்ரா: ஆக்ராவில் உணவக விடுதி பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சமூக வலைதளங்களில் இன்று பெண் ஒருவரை 5 -க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டயமாக இழுத்துச்செல்லுவதும் பின் அப்பெண் உதவி கேட்டு கதறி அழும் வீடியோ வைரலாக பரவியது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் உ.பி., மாநிலம் ஆக்ராவில் உணவக விடுதியில் பணியாற்றி வந்தவர் அப்பெண் எனவும் அவரை 5 பேர் கொண்ட கும்பல் மது ஊற்றி போதையில் இருந்த போது பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
தனது தோழியும் இன்னும் சில ஆண்களும் சேர்ந்து தன்னை வற்புறுத்தி மது அருந்த வைத்தது,, தன்னை ஒரு அறைக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும் போலீசில் வாக்குமூலம் கொடுத்ததையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement