புதுடெல்லி,
தேசிய தலைநகரில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாட்டை குறைக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பார்க்கிங் தளங்களுக்கான கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, 31 ஜனவரி 2024 வரை டெல்லியில் தனியார் வாகனங்களின் பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோசமான காற்று மாசுபாட்டினை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :