நடிகை, நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கண், காது, மூக்கு வைத்து எனத் தவறாகச் சித்திரிக்கப்படுவதுண்டு. பொது வெளியிலும் தனிப்பட்ட வாழ்விலும் என்றுமே கவனத்தோடு செயல்பட வேண்டிய சிக்கல் இவர்களுக்கு உள்ளது.

சில நேரங்களில் நடிகைகள் என்பதாலே அவர்கள் மீது பலருக்கு தவறான கருத்துகள் ஏற்படுவது உண்டு. இந்த நிலையில் ’காஃபி வித் கரண்’ சீசன் 8 நிகழ்ச்சியில் சமீபத்திய எபிசோடில் நடிகை ஆலியா பட் மற்றும் கரீனா கபூர் பங்கேற்று இருந்தனர்.
நிகழ்ச்சியில் ராபிட் ஃபயர் (Rapid Fire) சுற்றின் போது, ஆலியா பட்டிடம் கரண், `உங்களை பற்றி மக்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய விஷயம் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஆலியா பட், “இது இன்டர்நெட் காலம். ஒருநாள், எனக்குத் தாடைக்குக் கீழுள்ள கொழுப்பை அகற்றும் சிகிச்சை (Buccal fat surgery) செய்யப்பட்டிருக்கும். ஒருநாள், நான் எனது சருமத்தை வொயிட்டனிங் செய்திருப்பேன். ஒருநாள் எனது திருமண வாழ்வில் பிரச்னைகள் இருக்கும். இப்படி… கிளப்பிக்கொண்டே இருப்பார்கள்.

இப்படி… தவறான கருத்துகள் தவறான கருத்துகள்தான். அதனால் அவை என்னைத் தொந்தரவு செய்யப்போவதில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
மக்கள் தன்னை பற்றி என்னவெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஆலியாவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதை தாண்டி, அதனை தவறான செய்திகளை பரப்புவதற்காகச் சிலர் பயன்படுத்துவது பாதகம்.