2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.
இந்தத் தொடர் முழுக்கவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்திருக்கிறது. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா,

“இன்றைய நாளின் முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயன்று பார்த்துவிட்டோம். எதுவும் சாதகமாக அமையவில்லை. கோலியும் ராகுலும் நன்றாக ஆடினார்கள். நாங்கள் 270-280 ரன்களை அடிப்போம் என எதிர்பார்த்தோம். நிச்சயமாக இன்னும் 20-30 ரன்களை அதிகமாக அடித்திருக்க வேண்டும். 240 ஐ மட்டும் எடுத்திருக்கும்போது விக்கெட்டுகளை வேகமாக எடுக்க வேண்டும். அதை எங்களால் செய்ய முடியவில்லை. ஹெட்டும் லபுஷேனும் சிறப்பாக ஆடினார்கள். எங்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவது கொஞ்சம் சுலபமாக இருந்தது. ஆனால், தோல்விக்கு எந்த காரணத்தையும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை அவ்வளவுதான்.” என்றார் ரோஹித் சர்மா