சென்னை: நடிகர் அருண் விஜய்யின் 47வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல நடிகரான விஜய்குமாரின் மகனான அருண் விஜய் முறை மாப்பிள்ளை படத்தின்மூலம் அவர் கடந்த 1994ல் தமிழில் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை.
