“தமிழகத்தில் ஒவ்வொரு கோயில்களிலும், சொத்துகளைத் திருடி வருகிறார்கள்!" – நிர்மலா சீதாராமன்

உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரை தியாகராசர் கல்லூரியில் 5 நாள்கள் குடைவரைக் கோயில் கண்காட்சி நடைபெறுகிறது.

உலக மரபு வார விழாவில்

இந்தக் கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திலுள்ள பாரம்பர்யத்தை மக்களுக்குச் சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது.

தமிழக பாரம்பர்யத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும்போது, `அரசியல் நுழைகிறது, பாரம்பரியம் இது அல்ல… அது’ எனப் பல சர்ச்சைகள் வருகின்றன. ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள் வரலாம், எல்லோரும் எல்லாம் பேசலாம்.

நிர்மலா சீதாராமன்

தமிழகத்தின் பாரம்பர்யத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக வடிவமைத்திருக்கின்றனர். அமைச்சர் வருகிறார் என பாரம்பர்ய இடங்களில் வெள்ளையடித்து விடுகிறார்கள், வெள்ளையடிக்கபட்டதற்குப் பின்னால் உள்ள சரித்திரம், யாருக்கும் தெரிவதில்லை.

தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்திருப்பது, மனதுக்கு வேதனையாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களுக்கும், குடைவரைக் கோயில்களுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. குடைவரைக் கோயில்களிலுள்ள எழுத்துகளுக்கும் தமிழ் மொழி, ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளது.

நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பர்யம்தான். அதை நாம் பாதுகாக்க வேண்டும், மாணவர்கள் டாக்டர், இன்ஜினீயர்கள் என எது வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால், நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும்,

மாணவர்களுடன் நிர்மலா சீதாராமன்

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துகளைத் திருடி வருகிறார்கள், கோயில்களில் திருடப்படும் சொத்துகள் யாருக்குப் போகின்றன எனத் தெரியவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.