சென்னை: தமிழ்நாட்டில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டிசம்பம் 2வது வாரத்தில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டு, 4வது வாரம் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படும். இந்த நிலையில், நடப்பாண்டு, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2023 – 24ம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் நடந்து முடிந்தது. அதில், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது. […]
