வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டெல் அவிவ் : இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டு பணியாளர்களுடன் இந்தியா வந்த சரக்கு கப்பல், ஏமனில் ஹவுதி அமைப்பினரால் நேற்று கடத்தப்பட்டது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்த மாதம் 7ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது.
இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு, ஏமனின் ஹவுதி கிளர்ச்சி படை ஆதரவு தெரிவித்து வருகிறது.
போர் நீடிக்கும் சூழலில், ‘இஸ்ரேலின் கப்பல்கள் அல்லது அவர்களது கொடி பறக்க கூடிய கப்பல் செங்கடல் பகுதியில் சென்றால், அவற்றை கடத்துவோம்’ என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்த ‘கேலக்சி லீடர்’ என்ற சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று கடத்தினர்.
இதை இஸ்ரேலிய ராணுவம் உறுதி செய்துள்ளது. அது இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் இல்லை என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது.
இந்த கப்பல் ஆபிரகாம் உங்கர் என்னும் இஸ்ரேலிய தொழிலதிபருக்கு சொந்தமானது என்றும், அதில் இஸ்ரேலியர்கள் உட்பட பல நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. கப்பல் கடத்தப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement