Telangana Assembly Elections: 2G, 3G, 4G parties… says Amit Shah in Telangana for BRS, AIMIM, Congress | நான்கு தலைமுறைகளை கொண்ட 4ஜி கட்சி காங்கிரஸ்: அமித்ஷா கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜங்கான்: ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜிவ், ராகுல் என 4 தலைமுறைகளை கொண்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியை 4ஜி கட்சி எனக்கூறலாம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஜங்கானில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் (கே.சி.ஆர்) பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை குடும்ப கட்சிகள். இந்த மூன்று கட்சிகளையும் 2ஜி, 3ஜி, 4ஜி என சொல்லலாம்.

அதாவது, கே.சி.ஆர் மற்றும் கே.டி.ஆர் (கே.டி.ராமா ராவ்) என இரண்டு தலைமுறையை கொண்ட கட்சியை 2ஜி எனலாம். ஓவைசி கட்சி மூன்று தலைமுறையை கொண்டுள்ளதால் 3ஜி எனலாம். ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜிவ், ராகுல் என 4 தலைமுறைகளை கொண்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியை 4ஜி கட்சி எனக்கூறலாம். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.