சென்னை: Vikram (விக்ரம்) காசி பட ரிலீஸின்போது முதியவர் சொன்ன வார்த்தையை கேட்டு விக்ரம் தேம்பி தேம்பி அழுத சம்பவம் தெரியவந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விக்ரம். ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவரை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஏனெனில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு முழுதாக தன்னை ஒப்படைத்துக்கொள்பவர் அவர்.
