சென்னை ஆவினின் ஊதா நிறப் பால் குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அரிக்கையில். ”ஆவின் நிறுவனம் மூன்றடுக்கு நிர்வாக அமைப்பு முறையை கொண்டு விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலை நியாயமான மற்றும் நிலையான விலை கொடுத்து வாங்குவதையும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால்பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.ஆவின் நிறுவனத்தில் […]
