இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

புதுடெல்லி: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தோனேசியா, ஒரு பரந்த நிலப்பரப்பாகும். அங்கு 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில், இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. இது இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் டோபெலோவிற்கு மேற்கே 94 கி.மீ (58 மைல்) தொலைவில் 116 கி.மீட்டர் (72 மைல்) ஆழத்தில் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (Indonesia’s Meteorology, Climatology and Geophysical Agency) சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் கடந்த ஆண்டு 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 331 பேர் உயிரிழந்தனர் மேலும் 600 பேர் காயமடைந்தனர். 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.