கிளிநொச்சி மாவட்டத்தில் 2023/2024ம் ஆண்டிற்கான காலபோக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்குரிய உர மானியக் கொடுப்பனவு ஹெக்டேயர் ஒன்றுக்கு ரூபா.15,000.00 வீதம் உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், இதுவரை நான்கு கட்டங்களாக ரூபா. 163,295,028.00 வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
உர மானியக் கொடுப்பனவு தொகையினை கமநலசேவை நிலையவாரியாக கீழே விபரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனை https://www.agrarian.lk/ என்ற இணையத்தள முகவரியினுள் பிரவேசித்து FARMER INFORMATION என்பதை click செய்து தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் விவசாயிகள் தங்களது கணக்கிற்கு வைப்புச் செய்யப்பட்டுள்ள தொகை தொடர்பான விபரங்களைப் பார்வையிட முடியும் என கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.