டில்லி பாஜகவின் நிர்ப்பந்தத்தால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். அமலாக்கத்துறை யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், பத்திரிகையின் வெளியீட்டாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டரில், “அமலாக்க […]
