மொபைல் தொலைந்தாலும் சிம்மை தூக்கிப்போட முடியாது… இந்த ஆப்ஷனை பயன்படுத்துங்கள்!

How To Enable Airtel E-Sim: ஏர்டெல் நிறுவனத்தில் இ-சிம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பெரும்பாலான மக்கள் இன்னும் பிசிக்கல் சிம்மைதான் பயன்படுத்துகின்றனர். 1 இ-சிம் மூலம் உங்கள் சாதனத்தில் டிஜிட்டல் சிம்மை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இது ஒரு சிம் கார்டை போனில் போட்டுவைப்பதற்கான தேவையை நீக்குகிறது. மொபைல் இணைப்பை ஆதரிக்கும் ஸ்மார்ட்வாட்ச்களில் இது மிகவும் பொதுவானதாக கருதப்படுகிறது. 

அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் பயனர்கள் இ-சிம்மை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இதனுடன் பலன்களையும் அவர் எடுத்துரைத்துள்ளார். இ-சிம் என்பது ஒரு சாதனத்தில் இன்ஸ்டால் டிஜிட்டல் சிம் ஆகும். இது உங்கள் சாதனத்தில் உள்ள ஸ்லாட்டில் செருகக்கூடிய சிம் கார்டு போன்றது அல்ல. இ-சிம் சிம் டிரேயில் வைக்கப்படுவதற்குப் பதிலாக நேரடியாக சாதனத்தில் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இது ஒரு சாதனத்தின் eUICC சிப்பில் நிறுவப்பட்ட மென்பொருளைக் கொண்டுள்ளது. 

கோபால் விட்டலின் அறிவுரை

ஏர்டெல் சிஇஓ கோபால் விட்டல் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு இ-சிம் பற்றி மின்னஞ்சலில் தெரிவித்தார். உடல் சிம்மை விட இ-சிம் சிறந்த தேர்வாக அவர் முன்வைத்தார். இ-சிம் மூலம் வாடிக்கையாளர்கள் தடையற்ற இணைப்பை அனுபவிப்பார்கள் என்று விட்டல் கூறினார். சாதனத்தில் இ-சிம்கள் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. எனவே அவற்றை ஸ்லாட்டில் செருக வேண்டிய அவசியமில்லை. இது சாதனத்தை மெல்லியதாகவும் இலகுவாகவும் மாற்றும்.

திருட்டு சம்பவத்தில் உதவும்

திருட்டு சம்பவங்களில் இது பெரும் உதவியாக இருக்கும். உங்கள் மொபைல் திருடப்பட்டால், குற்றவாளிகளால் உங்கள் இ-சிம்மை அகற்ற முடியாது. இது உங்கள் ஃபோனைக் கண்காணிப்பதை எளிதாக்கும் மற்றும் மொபைல் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். Airtel Thanks செயலி மூலம் உங்கள் இ-சிம்மை எளிதாக செயல்படுத்தலாம் என்றும் விட்டல் தெரிவித்தார்.

இ-சிம், ஒரு டிஜிட்டல் சிம் கார்டு ஆகும். முதலில் ஐபோன் 12 தொடரில் பிரபலமானது. ஆப்பிள் ஐபோன் 12 தொடரில் நானோ சிம் மற்றும் இ-சிம் ஆகிய இரண்டு அம்சங்களையும் வழங்கியது. பயனர்கள் தங்கள் மொபைலில் ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஐபோன் 12இன் வெற்றிக்குப் பிறகு, பிற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் இ-சிம் திறன் கொண்ட தொலைபேசிகளை அறிமுகப்படுத்தத் தொடங்கினர். நீங்கள் இப்போது Samsung, Motorola, OnePlus மற்றும் இ-சிம்மை ஆதரிக்கும் பிற பிராண்டுகளின் பல ஃபோன்களைக் காணலாம்.

மேலும், கோபால் விட்டல் வாடிக்கையாளர்கள் அதிகளவில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். 

1. எனது ஸ்மார்ட்போன் ஏர்டெல் இ-சிம்மை இன்ஸ்டால் செய்ய இயலுமா?

இ-சிம் அம்சத்தை ஆதரிக்கும் அனைத்து சாதனங்களும் ஏர்டெல் இ-சிம்மை இன்ஸ்டால் செய்ய இயலும்.

2. எனது பிசிக்கல் சிம்மை இ-சிம்மிற்கு மாற்ற முடியுமா?

Airtel Thanks செயலி மூலம் பிசிக்கல் சிம்மை இ-சிம் ஆக மாற்றுவது மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதில் ஒரு கிளிக் செய்ய வேண்டியதுதான்.

3. இ-சிம்மாக மாற்ற எவ்வளவு நேரம் ஆகும்?

இ-சிம் சுயவிவரம் பதிவிறக்கம் செய்யப்பட்டு இயக்கப்பட்டவுடன், அது செயல்படுத்தப்படும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.