‘ரீட் மாவத்தையின் நூற்றாண்டு நிறைவை’ முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடப்பட்டது

கொழும்பு றோயல் கல்லூரி பிரதான மண்டபத்திற்கு நூற்றாண்டு நிறைவடைவதை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று (21) கல்லூரியில் நடைபெற்ற 79 ஆவது Philex கண்காட்சியுடன் இணைந்ததாக விசேட நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.

நூற்றாண்டு நினைவு முத்திரை, ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவினால், சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டது.

றோயல் கல்லூரி முத்திரைக் கழகத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் The Royal Philatelist நூலும் சாகல ரத்நாயக்கவுக்கு முத்திரைக் கழகத்தின் தலைவர் சானுக வனசிங்க மற்றும் செயலாளர் தேவீன் பாலசூரிய ஆகியோரால் வழங்கப்பட்டது.

வண. கவரகிரிய பேமரத்தன தேரர், றோயல் கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவா,முத்திரைக் கழகத்திற்குப் பொறுப்பான ஆசிரியை சமிலா பஸ்நாயக்க, றோயல் கல்லூரி பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர், முத்திரைக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.