4 வருடங்கள் பூர்த்தியாகிய சிறுவர்களுக்கு முன் பள்ளிக் கல்வியைக் கட்டாயப்படுத்தும் சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று சபைத் தலைவரும் கல்வி அமைச்சருமான கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், பொருளாதார சிக்கல்கள் காணப்படுகின்ற குழந்தைகளுக்காக, எதிர்காலத்தில் free primary பாடசாலைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். அதன்படி, மாணவர்கள் தரம் 10 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டிலுள்ள பாடசாலைகளில் நிழவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்காலத்தில் பூரணப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குனவர்தன எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் பாடசாலைகளின் கட்டமைப்பில் தான் சிக்கல் காணப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
இலங்கையில் மொத்தமாக சுமார், 243,000 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என்றால், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நாட்டினுள் 40,000 ஆசிரியர்களுக்கான பற்றாக் குறை காணப்படுவது என்பது மிகையானது.
ஆசிரியர்களை நியமிப்பதில்தான் சிக்கல் காணப்படுகிறது. சில பாடசாலைகளை ஒன்றாக சேர்த்தால் மாணவர்களைவ விட ஆசிரியர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் கானப்படுகிறது.
அத்துடன், 2023-2033 ஆம் ஆண்டுக்கான கல்வி சீர்திருத்தக் கொள்கை எதிர்காலத்தில் பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். ஆதன் பிரதிகள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். தற்போது, விஞ்ஞானத் துறைக்கு சுமார் 5,000 ஆசிரியர்கள் உள்ளனர். நீண்டகாலமாக பாடசாலைகளை வகைப்படுத்தி, கட்டமைத்தல் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேல் மாகாணத்தில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இந்த நாட்களில் இடம்பெற்று வருகின்றன. தேசிய பாடசாலைகளுக்கு 1,700 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமாணி அறிவித்தல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. சேவையை விட்டு வெளியானவர்களை கணக்கெடுத்து அதற்கு பதிலாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.