ஹாவேரி, : ஹாவேரி தாலுகா காந்திபூர் கிராமத்தில் வசிப்பவர் சங்கீதா, 45. இவரது மகன் சந்தேஷ், 21. ஹுப்பள்ளியில் இன்ஜினியரிங் படித்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், பெலகாவியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். மகனை நினைத்து தினமும் தாய் கண்ணீர் விட்டு அழுது வந்தார்.
இந்நிலையில் மகன் பெயரில் கோசாலை அமைத்து, மாடுகளை பராமரிக்க சங்கீதா முடிவு எடுத்தார். இதற்காக காந்திபூர் கிராமத்தில் 1 ஏக்கர் நிலம் வாங்கினார். 50 லட்சம் ரூபாய் செலவு செய்து, மகன் சந்தேஷ் பெயரில் கோசாலை கட்டினார்.
நேற்று முன்தினம் அந்த கோசாலையை, ஹுக்கேரி மடத்தின் மடாதிபதி சதாசிவ சுவாமிகள் திறந்து வைத்தார்.
இதுகுறித்து சங்கீதா கூறுகையில், ”என் மகன் விபத்தில் இறந்ததை, இன்னும் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. மாநிலத்தில் நிலவி வரும் வறட்சியால், கால்நடைகள் உணவின்றி தவிக்கிறது. கால்நடைகள் பசியை போக்க, இறந்து போன என் மகன் பெயரில், கோசாலை அமைக்க முடிவு செய்தேன். என் மகன் பிறந்தநாள் அன்று, கோசாலையை திறந்து உள்ளேன்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement