சித்ரதுர்கா, :விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய மனைவியை, கணவர் அரிவாளால் வெட்டியதால், அதிர்ச்சி ஏற்பட்டது.
சித்ரதுர்கா, செல்லகெரேவில் வசிப்பவர் சிவகுமார், 30. இவரது மனைவி ஆஷா, 26. தம்பதிக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை.மனைவியை சிவகுமார் அடித்து, கொடுமைப்படுத்தினார்.
கணவரின் தொந்தரவு தாங்க முடியாமல், பிரிந்து தாய் வீட்டுக்கு சென்ற ஆஷா, விவாகரத்து கோரி செல்லகெரே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது சிவகுமாருக்கு பிடிக்கவில்லை.
மனு தொடர்பாக, நேற்று விசாரணை நடக்கவிருந்தது. இதில் ஆஜராக தம்பதி, நீதிமன்றத்துக்கு வந்தனர்.
நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், செல்லகெரே பஸ் நிலையம் அருகே, தம்பதி நேருக்கு நேர் சந்தித்தனர்.
தன் விருப்பத்துக்கு மாறாக, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு வந்த மனைவியை கண்டதும், சிவகுமாருக்கு கோபம் தலைக்கேறியது. சாலை ஓரம் இளநீர் விற்பவரின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி, மனைவியை வெட்டினார்.
இதை கண்ட அப்பகுதியினர், சிவகுமாரை பிடித்து, அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்தனர். காயமடைந்த ஆஷா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement