கலபுரகி : ”பெலகாவி சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில், வறட்சியால் பயிர்கள் இழந்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவது, பயிர் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து, முதல்கட்டமாக முன்மொழியப்படும்,” என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.
கலபுரகி மாவட்டம், பாலா கிராமத்துக்கு நேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் வந்தார். வறட்சியால் பாதித்த பயிர்களை பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
எதிர்க்கட்சி தலைவரான பின், முதன் முறையாக இங்கு வந்து விவசாயிகளிடம் பேசினேன். வறட்சி நிவாரணத்துக்கு இதுவரை பணம் வரவில்லை. பணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் எழுப்பும் பிரச்னைகளை சட்டசபையில் முன்மொழிவேன். விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்.
குமாரசாமி முதல்வராக இருந்தபோது, மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல், விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தார். மாநிலம் முழுதும் பயணித்து, அரசிடம் பலமுறை முறையிட்டும், விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவில்லை.
நான் வருவாய் துறை அமைச்சராகவும், மாநில பேரிடர் நிவாரண நிதி பொறுப்பிலும் இருந்துள்ளேன். வழக்கமாக மத்திய அரசிடம் இருந்து இழப்பீடு கிடைக்க, எட்டு மாதங்களாகும். நான், 2 மாதங்களுக்குள் இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement